மிர்ச்சி அவார்டில் சன்னி லியோன் பங்கேற்பு!
மும்பையில் பன்னிரண்டாவது மிர்ச்சி இசை விருது விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான், தீபிகா படுகோன், சன்னிலியோன், ரவீனா டாண்டன், கரிஷ்மா தண்ணா, டாப்ஸி உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்ற இந்த விருதுகள் விழாவில் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு சிறந்த பாடகிக்கான விருது வழங்கப்பட்டது.
சிறந்த பாடகராக ஆர் ஜித் சிங், இசையமைப்பாளராக பிரித்தம் விருது பெற்றனர். லதா மங்கேஷ்கரின் சகோதரியான உஷா மங்கேஷ்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. பாடகிகள் நேகா காக்கர், சுனிதி சௌஹான், இசை அமைப்பாளர் பப்பி லக்கரி உள்ளிட்டோர் சிவப்பு கம்பள வரவேற்பு பெற்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




