--- --:--:-- --

பெண்களின் தூய்மை தன்மை குறித்து ஆடையை அவிழ்த்து சோதனை!

2

பெண்களின் தூய்மை தன்மை குறித்து அகமதாபாத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் 60 க்கும் மேற்பட்ட மாணவிகளின் ஆடைகளை அவிழ்த்து கல்லூரி நிர்வாகம் சோதனை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாதவிலக்கு அல்லது மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில் மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.

 

மனித உடலில் இருந்து கழிவுகள் எப்படி வெளியேறுகிறதோ அப்படியான ஒரு ஒன்றுதான் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு. மாதவிடாய் ஆன பெண் தீட்டு ஆனால், அவள் யாரையும் தொடக்கூடாது, தனித்து இருக்க வேண்டும், பூஜை அறை பக்கம் போகக்கூடாது, கோவிலுக்குப் போகக்கூடாது, சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது, ஒதுங்கியிருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே நிலவி வருகிறது.

 

மாதவிடாய் காலகட்டத்தில் பெண் தூய்மையாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான அதன் நோக்கம். ஆனால் மாதவிடாயை காரணம்காட்டி குஜராத்தில் ஒரு மகளிர் கல்லூரியே மாணவிகளிடம் நடந்துகொண்ட விதம் அதிர்ச்சியையும், முகச்சுளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஒரு பகுதியில் உள்ளது ஸ்ரீ ஷாஜகானந்த் மகளிர் கல்லூரி.

இந்த கல்லூரியில் தான் இந்த கொடுமை அரங்கேறியுள்ளது. 68 பெண்கள் மாதவிடாய் காலத்தில் விதிமுறையை மீறி வழிபாட்டு தலங்கள் மற்றும் சமையலறைக்கு சென்றதாக குற்றம் சாட்டி ஆடையை அவிழ்த்து சோதனை செய்யப்பட்டுள்ளன. பெண் பேராசிரியர்களை வைத்து தனித்தனியாக மாணவிகளை சோதிப்பதாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

இதனால் தாங்கள் மன உளைச்சலுக்கு ஆளானதுடன் பாதிப்படைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுதான் இப்போது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. மாணவிகளின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ள கல்லூரி நிர்வாகம், கல்லூரியின் ஒழுக்க விதிகளை மீறி நடந்ததால் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

 

இருப்பினும் மாணவிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டு இருப்பதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெண்கள் தங்களின் உரிமைகளுக்காக பல தளங்களிலும் தைரியமாக குரலெழுப்பும் தற்போதைய காலத்தில்தான் மாதவிடாயை காரணம்காட்டி புறக்கணிக்கப்பட்ட அவலமும் அரங்கேறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon