நடிகர் விஜய் பாடி வெளியாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தின் முதல் பாடல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இசை வெளியீட்டு விழாக்கள் தான் நடிகர் விஜய்க்கு அரசியல் மேடை. பல விழாக்களில் ஆக்ரோஷமாக பேசியுள்ள நடிகர் விஜய் தனது ஒவ்வொரு உரையிலும் குட்டி கதை சொல்லாமல் மேடையை விட்டு இறங்குவது கிடையாது.
மேடைகளில் தொடங்கிய இந்த குட்டி கதை பயணம் இப்போது பாடலிலும் வந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்திற்கு விஜய் பாடியுள்ள இந்த பாடலில் அனிமேஷன் காட்சிகளோடு அவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
அண்மையில் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தனக்கு எதிரான நெருக்கடிகள் குறித்து சூசகமாக பாடியிருக்கின்றார் விஜய். டிசைன் டிசைன் களாகப் பிரச்சினைகள் வந்துபோகும் என்றும் அதனை கூலாக கடந்து செல்ல வேண்டும் என்றும் பாடல் வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தக் காட்சியின்போது கொரொனா, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, ஊழல், ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட வாசகங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நமக்கு எதிராக வெறுப்புக் கொண்டு அவர்களை அமைதியுடன் கடந்து செல்ல வேண்டும் என்றும் வெறுப்பைத் தூண்டும் மனிதராக எப்போதும் உருவாகி விடக்கூடாது எனவும் அறிவுறுத்துகின்றார்.
நடிகர் விஜய் விஜய் பாடியுள்ள இந்த குட்டி கதை பாடல் தற்போது சமூக வலைதளங்களில் ஆக்கிரமித்து வைரலாகி வருகிறது. விஜய்யின் இந்த பாடலை அவரது ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.