--- --:--:-- --

பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் இலவசமாக பயணம் செய்ததால் 1374 பேருக்கு மொத்தமாக 1.60 ஆயிரம் வரை அபராதம்

14

சேலம் கோட்டத்திற்கு உட்பட்ட அரசு பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காமல் செல்வோரை,ஜனவரி மாதம் முதல் தற்போது வரை சோதனை நடத்தியதில் ஏராளமானோர் பிடிப்பட்டனர்.பயணச்சீட்டு எடுக்காமல் சென்றோரின் எண்ணிக்கை 1374 ஆகவும் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்ட அபராதம் 1.60 லட்சம் என தமிழக அரசு போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

வழித்தட சோதனை மற்றும் கூட்டுபரி சோதனையின் போது இவர்கள் பிடிபட்டனர் என்றும் இதுபோன்று பயணச்சீட்டு எடுக்காமல் செல்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.மேலும் பேருந்தில் செல்லும் பயணிகள் இதுபோன்ற தவறுகளில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon