--- --:--:-- --

காதலர் தினத்தன்று சச்சின் வீடியோ வெளியீடு

12

காதலர் தினமான இன்று தமது முதல் காதல் எது என்பது குறித்த வீடியோவை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்துள்ளார். சச்சின் டெண்டுல்கரும் அவரது மனைவி அஞ்சலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

 

ஆதலால் சச்சின் வெளியிட்ட வீடியோவில் மனைவி அஞ்சலி குறித்து தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கிரிக்கெட் விளையாடுவது தான் முதல் காதல் என்று பொருள்படும் வலை பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் காட்சியை சச்சின் பகிர்ந்துள்ளார்.

 

இந்த வீடியோவை பார்த்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சச்சினை பாராட்டி பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon