சேலம் அருகே ஆட்டோ ஓட்டுனரிடம் லஞ்சம் வாங்கியதாக காவல் உதவி ஆய்வாளர் மற்றும் தலைமை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பெரிய கொல்லப்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பிரகாஷ் என்பவர் போலீசாரின் வாகன சோதனையின் போது உரிய ஆவணங்களை வைத்திருக்கவில்லை.
இதனால் சோதனையில் ஈடுபட்டிருந்த கன்னங்குறிச்சி காவல் நிலைய தலைமைக் காவலர் கணேஷ் ஆட்டோ ஓட்டுனரிடம் பேரம்பேசி 600 ரூபாய் லஞ்சமாக பெற்று அந்த பணத்தை உதவி ஆய்வாளர் சுப்பிரமணியத்திடம் வழங்கியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை செய்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் சம்பந்தப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் தலைமை காவலர் கணேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள் :
நீட்டால் பறிபோன மாணவியின் உயிர்..!
விரிவாக்க பணியின் பொழுது சரிந்து விழுந்த நடைமேடை..!
கனமழை காரணமாக அரசு பள்ளிக்குள் தேங்கிய மழை நீர்..!
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!