--- --:--:-- --

இந்து முன்னணி நிர்வாகி கார் எரிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, இருவேறு இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைப்பு..!திருப்பூரில் பரபரப்பு..!!

4f537d83-e979-4db0-b229-67ccbc9107d9

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் மோகன் இவர் இந்துமுன்னணி கோட்ட செயலாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை அவரது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளனர்.

 

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்து முன்னணியினர் அப்பகுதியில் உள்ள கடைகளை அடைக்க சொல்லி வற்புறுத்தியதையடுத்து கொங்கு மெயின் ரோடு பகுதியில் 100க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்காமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.இந்த சம்பவத்தை கண்டித்து திருப்பூரில் இருவேறு பகுதிகளில் அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இந்நிலையில் எரிக்கப்பட்ட வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த சிசிடிவி காட்சிகளில் இரு வாகனங்களில் வந்த நான்கு பேரை நோட்டமிடும் காரின் முன் சக்கரத்தில் அமர்ந்து பற்ற வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடுவது பதிவாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon