சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் புதிய உத்தரவு!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் முன்பு அரசியல் சாசனத்தில் மதம் சார்ந்த பல்வேறு கேள்விகளுக்கு விடைகாண திட்டமிட்டுள்ள உச்சநீதிமன்றம் அது தொடர்பான உத்தரவை பிறப்பித்துள்ளது.
தலைமை நீதிபதி எஸ்ஏ பாப்டே நீதிபதிகள் ஆர்கே பானுமதி, அசோக் பூஷன், எல் நாகேஸ்வரராவ், சந்தன கவுடர், எஸ் அப்துல் நசீர், ஆர் சுபாஷ் ரெட்டி, பி ஆர் கவாய், சூரிய காந்த் ஆகிய 9 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளது. கேள்விகளுக்கு விடை காண அந்த உத்தரவில் மத சுதந்திரத்துக்கான நோக்கமும் எல்லையும் என்ன?
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி நீதிமுறைமை அரசியலமைப்பு முகப்பின் படி மத நம்பிக்கைகளுக்கு உட்பட்டதா?
ஒரு மதத்தின் சடங்குமுறைகள் உள்ளிட்டவற்றை தீர்மானிப்பது தொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்ப முடியுமா?
இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 25 இன் கீழ் 2பி யில் இந்து மதத்தின் பிரிவுகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதன் அர்த்தம் என்ன?
ஒரு மதப் பிரிவின் நம்பிக்கைகள் அரசியலமைப்புச் சட்டம் 26 ஆவது பிரிவின் பாதுகாப்பு வரம்புக்குள் வருமா? அவற்றை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா?
ஒரு மதத்தை சாராதவர்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் மத சடங்குகள், வழிபாட்டு முறை, நம்பிக்கை தொடர்பாக எந்த எல்லை வரை பொதுநல மனுக்கள் மூலம் கேள்வி எழுப்பலாம்?
ஆகிய கேள்விகள் தொடர்பாக விசாரிக்கப்போவதாக உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




