ட்விட்டர் சமூகவலைதளத்தில் 20 நிமிடங்கள் தொழில்நுட்ப பிரச்னை
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் இன்று காலை 20 நிமிடங்களுக்கு நிலவிய தொழில்நுட்ப பிரச்சனையால் பதிவுகளை வெளியிட முடியாமல் சமூக வலைதள பயன்பாட்டாளர்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகினர். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ட்விட்டரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை 20 நிமிடங்களுக்கு அதில் சமூக வலைதள பயன்பாட்டாளர்களால் சீராக பதிவுகளை வெளியிட முடியவில்லை. தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்யும் பணிகள் நடப்பதாக ட்விட்டர் விளக்கம் அளித்ததை தொடர்ந்து சில நிமிடங்களில் அது சீரானது, எனினும் எந்த காரணத்திற்காக தொழில்நுட்ப பிரச்சனை நேரிட்டது குறித்து ட்விட்டர் தெரிவிக்கவில்லை.






