--- --:--:-- --

கல்லூரி மாணவர்கள் ரயிலில் அபாயகரமான பயணம்

11

நெல்லை அருகே ரயிலில் படியில் தொங்கியவாறு கல்லூரி மாணவர்கள் அபாயகரமான முறையில் பயணித்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. நெல்லையில் இருந்து செங்கோட்டைக்கு இயக்கப்படும் விரைவு ரயில் வழித்தடம் முக்கியமானது என்பதால் காலை, மாலை என இருவேளையும் இந்த ரயிலில் பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

 

இந்நிலையில் சேரன்மகாதேவி அருகே கல்லூரி மாணவர்கள் சிலர் இந்த வழித்தடங்களில் அபாயகரமான முறையில் தொங்கியவாறு பயணித்த வீடியோ காட்சி இணையதளத்தில் பரவி வருகிறது. இது போன்ற செயல்களை தடுக்க கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Right Menu Icon