--- --:--:-- --

நிர்பயா வழக்கு: மத்திய அரசு மனு மீது பிப்.11 விசாரணை

1

நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிடக் கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

நிர்பயா பாலியல் குற்றவாளிகளை தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்க கோரி மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு குற்றவாளிகள் 4 பேரும் தங்களுக்கான வாய்ப்புகளை 7நாட்களில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது.

 

இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தபோது குற்றவாளிகள் 4 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என மத்திய அரசின் சார்பில் வாதிடப்பட்டது.

 

விசாரணையை வருகிற 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதிகள் அன்றைய தினம் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர். இதற்கிடையே 4 குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கு புதிய தேதியை அறிவிக்க கோரிய திகார் சிறை நிர்வாகத்தின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Leave a Reply

Right Menu Icon