இரண்டாவது கிரிக்கெட் ஸ்டேடியத்தின் திறப்புவிழா
சேலத்தில் 2 வது சர்வதேச கிரிக்கெட்ஸ்டேடியத்தின் திறப்பு விழா வாழப்பாடியில் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த திறப்பு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி,முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ,இந்தியா சிமெண்ட் ஓனர் மற்றும் முன்னாள் பிசிசிஐ சேர்மன் ஆன ஸ்ரீனிவாசன்,தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ரூபாகுருநாத் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த கிரிக்கெட் ஸ்டேடியம் டிஎன்பிஎல் நடத்தவும் வருங்காலங்களில் ஐபிஎல் போட்டியை நடத்தவும், இங்குள்ள மாணவர்கள் பயிற்சி பெறவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.






