--- --:--:-- --

மனைவி, கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு கணவன் தப்பி ஓட்டம்

2

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மனைவி மற்றும் கள்ளக்காதலனை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கொசுவம் பாளையத்தை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவர் தம் மனைவிக்கும், சக்தி என்பவருக்கும் தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் முத்துக்கிருஷ்ணன் வீட்டிற்கு வந்தபோது அவர்கள் இருவரும் வீட்டில் ஒன்றாக இருந்துள்ளனர்.

 

இதை கண்டு ஆத்திரமடைந்த அவர் சக்தியை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதை தடுக்க முயன்ற அவரது மனைவிக்கும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon