7வது தேசிய மிதிவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மிதிவண்டிகள் !!!
கோவையில் நடைபெற்ற 7வது தேசிய மிதிவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மிதிவண்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
கோவையில் தேசிய அளவிலான மிதிவண்டி பந்தயம் பினாக்கிள் விளையாட்டு மற்றும் தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத்துடன் இணைந்து, செட்டி ப்பாளையம் கரிமோட்டார் ஸ்பீடு வேயில் நடைபெற்றது.
7வது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியானது, தொழில்ரீதியாக பந்தய வீரர்கள், சாதாரண ஆண்கள், பெண்கள், 18வயதுக்குட்பட்ட குழந்தைகள், 40 வயதுக்கு மேற்பட்ட மாஸ்டர்ஸ் ஆண்கள், பெண்கள், 55வயதுக்கு மேற்பட்ட முதியோர் என பல்வேறு பிரிவுகளில் மிதிவண்டி போட்டி நடத்தப்பட்டது. அனைவரும் வெற்றி பெறும் நோக்கில் சீறிப்பாய்ந்த மிதிவண்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

தமிழகம், கேரளா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 670 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட இப்போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பைகளும் பரிசுகளும் என மொத்த ரொக்க பரிசு ரூ.2,40,000 வழங்கபட்டது.
கோவையில் நடைபெற்ற 7வது தேசிய மிதிவண்டி பந்தயத்தில் சீறிப்பாய்ந்த மிதிவண்டிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.





