காலையில் பிரசவம்..மாலையில் திருமணம்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் காலையில் குழந்தை பிறந்த இளம்பெண்ணுக்கு மாலையில் திருமணம் நடந்தது. கடகம் பாக்கத்தை சேர்ந்த கோகிலா என்ற கல்லூரி மாணவியும், அதே பகுதியை சேர்ந்த பரமசிவம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.
காதலனிடம் நெருங்கி பழகியதால் கோகிலா கர்ப்பம் அடைந்துள்ளார். அவருடைய பெற்றோர் திருமணம் செய்து வைக்க முன் வந்த நிலையில் இளைஞரின் வீட்டார் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்தநிலையில் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருந்த கோகிலாவுக்கு கடந்த சனிக்கிழமை அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
அன்றைய தினமே திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் இரு தரப்பைச் சேர்ந்தவர்களையும் நேரில் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.





