--- --:--:-- --

தாய்லாந்தில் இருந்து சென்னை கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்கள்..!

5

தாய்லாந்தில் இருந்து விமானம் மூலமாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட அரிய வகை வன உயிரினங்களை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து வந்த விமான பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 

அதில் சென்னையை சேர்ந்த இப்ராஹிம் பையில் அரிய வகை வன உயிரினங்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பாலைவன கீரிகள், காட்டு தவளைகள், பச்சோந்திகள், சிலந்திகள் உள்ளிட்டவை அவரிடம் இருந்து மீட்கப்பட்டன.

 

உயிரினங்களை எடுத்து வர எந்தவித ஆவணங்களும் சான்றிதழ்களும் இல்லாத நிலையில் இப்ராகிம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon