--- --:--:-- --

வானில் கரு நிற வளையம்… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

1

பாகிஸ்தானில் லாகூர் நகர் வான் பகுதியில் கருவளையம் போன்ற வடிவம் பறந்து செல்லும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. நாகூர் சாலையில் சென்ற வாகன ஓட்டி ஒருவரால் அந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அதில் மிகப் பெரிய கருப்பு நிற வளையம் போன்ற வடிவம் வானில் நகர்ந்து செல்வது பதிவாகியுள்ளது.

 

அந்த கரு நிற வளையம் எங்கு இருந்தது வந்தது என தெரியவில்லை. அந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஹாலிவுட் திரைப்படங்களில் விண்வெளி மனிதர்களின் விமானமாக காட்டப்படும் சாதனம் போல அந்த வளையம் இருக்கும் என்பதை சுட்டிக்காட்டி விண்வெளி மனிதர்களின் விமானமாக இருக்கலாம் என சிலர் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

சிலர் ஆலையில் இருந்து வெளியேறும் புகை உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட வளையமாக இருக்கலாம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon