--- --:--:-- --

கேரளா: மசூதியில் பாரம்பரிய சடங்குகளுடன் நடந்த இந்து திருமணம்

6

கேரளாவில் மசூதியில் பாரம்பரிய சடங்குகளுடன் இந்து திருமணம் நடத்தப்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழை அருகே சிறுவள்ளி ஜமாத் மசூதி உள்ளது. இங்கு அரிய நிகழ்வாக பாரம்பரிய சடங்குகளுடன் இந்த திருமணம் நடைபெற்றது.

 

மணப்பெண் அஞ்சு, ஏழை குடும்பத்தை சேர்ந்தவர். தன் மகள் திருமணத்தை நடத்தி வைக்கும் படி அஞ்சுவின் தாயார் சிறுவள்ளி ஜமாத் கமிட்டியிடம் உதவி கோரியுள்ளார். இதை ஏற்றுக்கொண்ட மசூதி நிர்வாகம் அஞ்சுவிற்க்கும், சரத்திற்க்கும் மசூதியில் இந்து முறைப்படி திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

 

இந்துக்கள், இஸ்லாமியர்கள் என இரு தரப்பினரும் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமண புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேரள மாநிலம் மதநல்லிணக்கத்திற்கு எப்போதும் உதாரணமாக திகழ்கிறது என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon