ஜெ.பிறந்தநாள் விழா ஆலோசனை..! விருதுகள் வழங்கும் விழா..! அமைச்சரவை கூட்டம்…! முதல்வர் எடப்பாடி சுறுசுறுப்பு!!
பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்த மறுநாளே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டம் திருவள்ளுவர் தின விழா தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா தமிழக அமைச்சரவைக் கூட்டம் என ஒரே நாளில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார்.
புத்தாண்டு, உள்ளாட்சி மறைமுகத் தேர்தல், தைப்பொங்கல் என அடுத்தடுத்து வந்ததால் இந்த 2020-ம் ஆண்டு பிறந்தது முதலே, முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் சொந்த மாவட்டங்களுக்கு படையெடுத்தனர். இதனால் தலைமைச் செயலகமே வெறிச்சோடி காணப்பட்டது எனலாம்.
இந்நிலையில் இன்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வரும் அமைச்சர்களும் அடுத்தடுத்து பங்கேற்று வருவதால் மீண்டும் களைகட்டத் தொடங்கியுள்ளது. காலை 9 மணிக்கே, அதிமுக தலைமைக் கழகத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில் அடுத்த மாதம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்த ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயலலிதா பிறந்த நாளில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும் மத்திய அரசு தமிழக அரசின் மக்களின் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என அதிமுகவினரை வலியுறுத்தினார்.
இதைத் தொடர்ந்து 10.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற திருவள்ளுவர் தின விழா மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு தமிழக அரசின் விருதுகளை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இந்த விழா முடிந்த உடன் தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது .இந்தக் கூட்டத்தில் தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் குறித்தும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்தும் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது. இப்படி ஒரே நாளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றதால் சென்னையில் அரசியல் பரபரப்பு மீண்டும் விறுவிறுப்பாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




