--- --:--:-- --

தமிழகத்திற்கு உதவ வேண்டிய கடமை ரஜினிக்கு உண்டு

11

தமிழகத்திற்கு உதவ வேண்டிய கடமை நடிகர் ரஜினிகாந்திற்கு உண்டு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் கவலை அளிப்பதாகவும் இதுபோன்ற சர்வாதிகார போக்கு மாற வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் அதிமுக மாறி மாறி பேசி வருவதாக தெரிவித்த கமலஹாசன், தமிழகத்தை முன்னேற்ற வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது என்றும் குறிப்பிட்டார். உழைப்பு வியர்வை செல்வம் ஆகியவற்றை முதலீடு செய்யவேண்டும் எனவும் ரஜினிக்கும் இந்த கடமை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆங்கிலோ இந்தியன் நியமன சட்டப்பேரவை உறுப்பினர் நீக்க முடிவு கொடுத்த கேள்விக்கு அவர்களும் இந்தியர்கள்தான் எனவும் அவர்கள் எங்கே செல்வார்கள் என்றும் கமலஹாசன் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Right Menu Icon