5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சாதிசான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம்

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத சாதிசான்றிதழ் மற்றும் ஆதார் அட்டை கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. நடப்பு கல்வியாண்டு முதல் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட உள்ளது.

 

இதனை அடுத்து அனைத்து பள்ளிகளிலும் பொதுத்தேர்வு எழுதும் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களின் விவரங்களை இ எம் ஐ எஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்றம் செய்ய அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விண்ணப்பத்தில் மாணவர்களின் பெயர், முகவரி பெற்றோர் விவரம் உள்ளிட்ட அடிப்படை தகவல்கள் கேட்கப்பட்டுள்ளன.

 

அரசு மற்றும் தனியார் பள்ளி என ஒவ்வொரு மாணவரின் சாதி சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் பிறப்பு சான்றிதழையும் கட்டாயம் தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாணவர்களின் முன்னேறிய பிரிவினர் இருந்தால் அவர்களின் ஜாதி சான்றிதழ் தேவையில்லை என விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply