அடுத்த பரபரப்புக்கு தயாராகிறது தமிழகம்..! 1028 கூட்டுறவு சங்கங்களுக்கு பிப்ரவரி 3-ந் தேதி தேர்தல்!!

தமிழகம் முழுவதும் உள்ள 1028 கூட்டுறவு சங்கங்களுக்கு அடுத்த மாதம் 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் பரபரப்பு முடிவடைந்த நிலையில், பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1028 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும் என மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

அதன்படி கூட்டுறவு சங்கங்களில் உள்ள 11, 368 இயக்குநர்களை தேர்வு செய்ய பிப்ரவரி 3-ந்தேதி தேர்தல் நடைபெறும் எனவும், மறுநாள் 4-ந் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 27 ந் தேதியும், 28-ந் தேதி பரிசீலனையும், 29 -ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இதில் வெற்றி பெறும் நிர்வாகிகள், பிப்ரவரி 8-ந்தேதி கூட்டுறவு சங்கத் தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்யும் மறைமுகத் தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பதவிகளைக் கைப்பற்ற, கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் ஆதரவைப் பெற அதிமுக மற்றும் திமுக இடையே கடும் போட்டி ஏற்படும் எனத் தெரிகிறது. இதனால் தமிழகத்தில் அடுத்த கட்டமாக கூட்டுறவு சங்கத் தேர்தல் பரபரப்பு களைகட்டத் தொடங்கியுள்ளது.


Leave a Reply