--- --:--:-- --

திரைப்படங்களால் பாலியல் வன்கொடுமையா? : குஷ்பு பதில்

8

திரைப்படங்களால் பாலியல் வன்கொடுமை நடப்பதாக கூறுவது தவறான கருத்து என காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு பேசியுள்ளார்.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய குஷ்பு, பெண்கள் பாதுகாப்பில் சென்னையைப் போல ஒரு நகரம் இல்லை என்றும், ஆனால் சென்னையிலும் பிரச்சனைகள் உள்ளதாகவும் கூறினார்.

 

மேலும் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படும் பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டுமென்றும், தானும் காவலன் செயலியை பயன்படுத்துவதாகவும் குஷ்பு கூறினார். குற்றங்கள் நடப்பதற்கு நாம் உடுத்தும் உடை, பேச்சு, எந்த நேரத்தில் வெளியே செல்கிறோம் என்பதோ காரணம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Right Menu Icon