--- --:--:-- --

ஆண் நண்பனுடன் டிக் டாக்! கணவனின் அதிரவைக்கும் செயல்

3

டிக்டாக்கில் ஆண் நண்பருடன் சேர்ந்து வீடியோ வெளியிட்டதால் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 

சத்தீஸ்கர் மாநிலம் தலைநகரம் ராய்ப்பூரில் உள்ள தனியார் விடுதி அறை ஒன்றில் இளம்பெண்கள் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது இரண்டு இளம் பெண்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

 

பட்டப்பகலில் விடுதி அறையில் அரங்கேறிய இரட்டை படுகொலை சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வாலிபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பித்து ஓடுவது போன்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவானதை வைத்து அந்த இளைஞர்கள் யார் என்பதையும் அந்த இளைஞர்களுக்கும் இந்த இரண்டு பெண்களுக்கும் என்ன தொடர்பு என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

 

அதன்படி உயிரிழந்த பெண்கள் இருவரும் சகோதரிகள் என்பதும் அவர்களை தாக்கியது சைஃப், குலாம் முஸ்தபா என்பது தெரியவந்துள்ளது. சகோதரிகளான மனிஷாவும், மஞ்சுவும் ராய்காட் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதில் மனிஷா ராய்ப்பூரில் தங்கி நர்சிங் படித்து வந்துள்ளார். இவருக்கு உதவியாக சகோதரி மஞ்சுவும் விடுதியில் தங்கி அவருக்கு உதவியாக இருந்து வந்துள்ளார்.

 

மேலும் சைஃப்பும், மஞ்சுவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதும் மாமியார் வீட்டில் ஏற்றுக்கொள்ளாததால் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தது தெரியவந்தது. இதனிடையே ஆண் நண்பர் ஒருவருடன் சேர்ந்து நடித்த டிக் டாக் வீடியோவை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் மஞ்சு.

ஏற்கனவே மஞ்சு மீது ஆத்திரத்தில் இருந்த சைஃப் அந்த வீடியோவை பார்த்து மேலும் கோபம் அடைந்துள்ளார். ஆத்திரத்தில் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக முஸ்தபா எனும் நண்பரின் உதவியை நாடிய சைஃப் தனது மனைவியை கொலை செய்தால் ஏழு லட்சம் ரூபாய் பணம் தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

 

இதனையடுத்து அவர்கள் இருவரும் சகோதரிகள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக பேசியுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றி அவர்களுக்குள் மோதல் வெடித்துள்ளது.

 

இதனால் ஆத்திரமடைந்த சைஃப்பும், முஸ்தபாவும் அங்கிருந்த தோசை சுடும் தவாவால் மஞ்சுவை அடித்து கொலை செய்துள்ளனர். இதனை தடுக்க வந்த மனிஷாவையும் அவர்கள் கொடூரமாக கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

 

இந்த இரட்டை படுகொலை சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தை அதிர வைத்துள்ளது. இதனால் விசாரணையை துரிதப்படுத்த போலீசார் விடுதிக்கு வெளியே இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் செய்யும் சைஃப்பையும், முஸ்தபாவையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon