எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி படத்திற்கு தடை கோரிய மனு
நடிகர் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி திரைப்படத்திற்கு தடை கோரிய மனுவை சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ள கேப்மாரி படத்திற்கு தடை கோரி சுப்பிரமணியன் என்பவர் சார்பில் சிதம்பரம் என்பவர் மனு அளித்திருந்தார்.மனுவில் டிராபிக் ராமசாமி என்ற படத்தின் விநியோக உரிமை தொடர்பான விவகாரத்தில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் 20 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருப்பி தரவில்லை எனவும் அந்தப் பணத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட கேப்மாரி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
வழக்கு நீதிபதி செல்வகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது டிராபிக் ராமசாமி திரைப்படத்தின் ஒப்பந்தப்படி பணத்தை வழங்காமல் கடைசி நேரத்தில் ஒப்பந்தத்தை ரத்து செய்ததால் பாதிப்புக்கு உள்ளானதாகவும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் எஸ்ஏ சந்திரசேகர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கேப்மாரி படத்திற்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




