டெஸ்ட் ரைடு ஓட்டுவதாக கூறி ராயல் என்பீல்டு பைக்கை திருடிய நபர்!

விழுப்புரத்தில் பைக் ஷோரூமில் டெஸ்ட் டிரைவ் செய்வது போல நடித்து என்ஃபீல்டு பைக்கை லாவகமாக திருடிச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் சென்னை சாலையில் அமைந்துள்ள ராயல் என்ஃபீல்ட் ஷோரூமுக்கு கடந்த 9ஆம் தேதியில் சஞ்சீவி என்ற நபர் வந்துள்ளார்.

 

என்ஃபீல்டு பைக் வாங்க உள்ளதாகவும் இதனால் பைக்கை ஓட்டி பார்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இதனையடுத்து ஷோரூம் ஊழியர் மோகன்தாஸ் அந்த நபருக்கு ஹெல்மெட் வழங்கி பைக்கை கொடுத்து அனுப்பியுள்ளார்.

 

என்பீல்ட் ஷோரூம் ஊழியர் தாமும் உடன் வருவதாகக் கூறியுள்ளார். இதனை மறுத்த மர்மநபர் பைக்கை தான் தனியாக ஓட்ட வேண்டும் என கூறிவிட்டு பைக்கை எடுத்து சென்றுள்ளார். இதனிடையே சிறிது தூரம் பைக் சென்றதும் அந்த மர்மநபர் பைக் ஷோ ரூமிற்கு அழைத்து பெட்ரோல் தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

 

இதைத்தொடர்ந்து ஷோரூமில் உள்ளவர்கள் அங்கு சென்று பெட்ரோல் இல்லாமல் இருக்கும் வாகனத்திற்கு ஒரு லிட்டர் பெட்ரோலை வாங்கி அவருக்கு வண்டியில் நிரப்பியுள்ளனர். பத்து நிமிடத்தில் தான் வருவதாக கூறிவிட்டு சென்ற மர்ம நபர் திரும்பி வரவில்லை ஷோரூமுக்கு அவருடன் காரில் உடன் வந்திருந்த நபரும் அங்கிருந்து நைசாக தலைமறைவாகிவிட்டார்.

 

அப்போதுதான் வாகனம் திருடப்பட்டது ஷோரூமில் உள்ளவர்களுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அங்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சியை வைத்து மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


Leave a Reply