இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட அழகிப்போட்டியில் தமிழக பெண் வென்ற பட்டம்!
இந்தோனேசியாவில் நடத்தப்பட்ட மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் கூடலூரை சேர்ந்த பெண் மிஸ் ஷைநிங் ஸ்டார் பட்டத்தை வென்றுள்ளார். இந்தியன் ஃபேஷன் பிஸ்தா அமைப்பு சார்பாக இந்தியாவில் மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் என்ற போட்டி நடத்தப்பட்டது.
நாடு முழுவதிலும் இருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். இதில் அழகு மட்டுமின்றி பல்வேறு தனித்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. கோவா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்ற போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு 30 பேர் தேர்வாகினர்.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக செயல்பட்டதற்காக நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த பிரதிக்ஷா என்ற பெண் மிஸ் ஷைநிங் ஸ்டார் என்ற பட்டத்தை வென்றுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




