--- --:--:-- --

நாளை விண்ணில் ஏவப்படுகிறது பிஎஸ்எல்வி சி 47 ராக்கெட்

3

கார்டோ ஷாட் 3 செயற்கைகோள் மற்றும் அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் நாளை காலை விண்ணில் ஏவப்பட இருக்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து காலை 9 மணி 28 நிமிடத்திற்கு ராக்கெட் செலுத்தப்பட இருக்கிறது.

 

ஆயிரத்து 625 கிலோ எடைகொண்ட மூன்றாம் தலைமுறை அதிநவீன கார்டோ ஷாட் செயற்கைக்கோள் புவியிலிருந்து 509 கிலோமீட்டர் தொலைவிலான சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட இருக்கிறது. அங்கிருந்தபடி பூமியை கண்காணிப்பதுடன் உயர் தரத்திலான புகைப்படத்தை எடுத்து அனுப்பும் திறன் கொண்டது.

 

இது ஐந்து ஆண்டுகள் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அமெரிக்காவின் 13 நானோ செயற்கைக் கோள்களுடன் செலுத்தப்பட இருக்கின்றன. இதற்கான கவுண்ட்டோன் இன்று காலை தொடங்கி இருக்கிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon