அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஃபின்லாந்து குழு பயிற்சி

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பின்லாந்தை சேர்ந்த 6 பேர் கொண்ட கல்வி குழுவினர் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து வருவதாக பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

 

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிற்சியை சிஜிதாமஸ் வைத்தியன் தொடங்கிவைத்தார்.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்லாந்து கல்வித்துறையுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டதின் விளைவாக தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை மேம்படுத்த 6 பேர் கொண்ட பின்லாந்து கல்வி குழு சென்னை வந்தடைந்ததாக தெரிவித்தார்.

 

சென்னையில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளை பார்வையிட்ட பின்னர் மாணவர்களின் கற்றல் முறையை மேம்படுத்துவது, பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்து கல்விக்குழு பயிற்சி வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply