பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் இளைஞர்களிடம் மட்டுமில்லாமல் பெண்களிடமும் தவறு இருக்கிறது என திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்துள்ளார். ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள கருத்துக்களை பதிவு செய் என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் இயக்குனர் கே பாக்யராஜ் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர் பொள்ளாச்சி சம்பவத்தில் பெண்களின் பலவீனத்தை சில இளைஞர்கள் தவறாக பயன்படுத்திக் கொண்டார்கள் என்று தெரிவித்தார். தன்னைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் இளைஞர்களிடம் மட்டுமல்ல அந்த பெண்களிடமும் தவறு இருக்கிறது என இயக்குனர் பாக்யராஜ் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகை மீரா மிதுன் இந்த படத்தின் கதை போன்று கடந்த ஓராண்டாக தமக்கு அநீதி நடப்பதாக கூறினார். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளால் தாமும் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு தமிழகத்தில் நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும் மீரா மிதுன் குற்றம்சாட்டினார்.