அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை – சுனில் கவாஸ்கர்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 க்கு 0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. தொடர்ச்சியாக ஏழு டெஸ்ட் போட்டிகளை வென்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 6 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த சாதனையை முறியடித்துள்ளது.
இந்திய அணியின் வெற்றிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நமது பந்துவீச்சாளர்கள் பயமின்றி இருக்கிறார்கள் ,யாருக்கு எதிராக பந்து வீசினாலும் அவர்களுக்கு அவர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது கடந்த மூன்று, நான்கு வருடங்களாக கடினமாக உழைத்து அதற்கான பலனை அறுவடை செய்து வருகிறோம்.
இந்திய அணியின் வெற்றியை சவுரவ் கங்குலியின் காலத்திலிருந்து தொடங்கியது. அதனை நாங்கள் முன்னெடுத்துச் செல்கிறோம் என தெரிவித்தார்.இதற்கு பதிலடி தந்துள்ள கவாஸ்கர் 1970 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் இந்தியா வெற்றி பெற்றது. அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை. 2000 ஆண்டு தான் கிரிக்கெட் தொடங்கியதாக பலரும் நினைக்கிறார்கள்.
ஆனால் இந்திய அணி எழுபதுகளிலேயே வெளிநாடுகளில் வெற்றிகளை குவித்தது. சில போட்டிகளை சமன் செய்தது என தெரிவித்தார். மேலும் கங்குலி பிசிசிஐ தலைவர் என்று எனக்கு தெரியும். எனவே அவரைப் பற்றி சிறப்பானதை பேசுவதற்காக விராட்கோலி இவ்வாறு பேசி இருக்கலாம் என்றும் கவாஸ்கர் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




