--- --:--:-- --

குழந்தைகள் விரும்பி உண்ணும் ரஸ்க் பாக்கெட்டில் கண்டெடுக்கப்பட்ட போல்ட்!

5

கரூர் பேருந்து நிலையத்தில் வாங்கிய ரஸ்கில் இரும்புத்துண்டு இருந்ததாக கரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

 

புராணி கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் என்பவர் கரூர் பேருந்து நிலையத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் ரஸ்க் பாக்கெட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார். அப்போது அதில் இரும்புத்துண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

 

உடனடியாக அதை அப்படியே எடுத்து சென்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் புகார் அளித்தார். குழந்தைகள் அதிகமாக விரும்பி உண்ணும் ரஸ்க் பாக்கெட்டில் போல்டு போல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதற்கிடையே விவேகானந்தன் புகார் குறித்து முறையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon