--- --:--:-- --

நீட் தேர்வு: கடினமாகிறது விண்ணப்ப நடைமுறை

4

நீட் தேர்வு முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்திருக்கும் நிலையில் விண்ணப்பம் மற்றும் சரிபார்ப்பை மேலும் கடுமையாக்க தேசிய தேர்வுகள் முகமை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

நீட் ஆள்மாறாட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இனி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது மாணவர்கள் தங்களது பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பதிவு எண்களை நிரப்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

விண்ணப்பம் பதிவு செய்யும்போது நேரடியாக புகைப்படம் எடுப்பதுடன், ஏதேனும் ஒரு அடையாள அட்டையையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் ஆதார் அடையாள அட்டை சரிபார்ப்பிற்கு மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறையிடம் ஒப்புதல் கோரப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

 

தேர்வு மையத்தில் ஹால்டிக்கெட்டில் உள்ள புகைப்படத்திற்கும், உருவ தோற்றத்திற்கும் ஏதேனும் வேறுபாடுகள் இருப்பதாக தோன்றினால் விண்ணப்பிக்கும்போது நேரடியாக எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

 

விண்ணப்பிக்கும்போது பதிவேற்றம் செய்யும் அடையாள அட்டையையும் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் எடுத்துச் செல்ல வேண்டும்.

Leave a Reply

Right Menu Icon