--- --:--:-- --

பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது

20

பரபரப்பான சூழலில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது.

 

இதில் தமிழகத்தில் புதிய தொழில்கள் தொடங்க அனுமதி தருவது, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலுக்கான நிதி ஒதுக்கீடு, பொங்கல் பரிசு தொகுப்புக்கு நிதி ஒதுக்குவது, தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுப்பது என்பன உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும் பல்வேறு துறைகளில் கொள்கை முடிவுகள் குறித்தும் அமைச்சர்களுடன் விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

 

உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முனைப்பு காட்டி வரும் நிலையில், அது தொடர்பாகவும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது. கடந்த 7ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon