கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிக்கதாசம் பாளையம் ஊராட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சேரன் நகர் 1 , சேரன் நகர் 2 ,பாயப்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் அத்தியாவசியத்தேவையான குடிநீரை காசு கொடுத்து விலைக்கு வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.
குடிநீர் சரியான முறையில் விநியோகிக்க வலியுறுத்தியும்,30 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள்,பொதுமக்கள் காலி குடங்களுடன் காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படாததை கண்டித்து காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு 100 க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 200 பேர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.