சிலைக்கடத்தல் ஆவணங்களை தாக்கல் செய்க- பொன். மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
சிலை கடத்தல் குறித்த அறிக்கைகளை உயர் அதிகாரிகளுக்கு அளிக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொன்மானிக்கவேல் ஓய்வு பெறுவதற்கு முன்பு அவர் விசாரித்த சிலை கடத்தல் வழக்குகளில் ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தமிழக அரசின் கோரிக்கைக்கு பொன்மாணிக்கவேல் தரப்பு கடும் ஆட்சேபனை தெரிவித்தது.

சிலை கடத்தல் வழக்கு விசாரணைக்கு உயர் அதிகாரிகளும், அரசும் எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதை சுட்டிக் காட்டியது. அதனால் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருக்கும் மனு ஏற்புடையது அல்ல என்றும், அதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்றும் வாதிடப்பட்டது.
மேலும் சிலை கடத்தல் வழக்கில் சில முக்கிய அமைச்சர்களுக்கு நேரடி தொடர்பு இருப்பதாகவும் விசாரணையை நீர்த்துப்போகச் செய்வதற்கான அனைத்து வேலைகளும் நடைபெற்று வருவதாகவும் பொன்மானிக்கவேல் தரப்பில் எடுத்துரைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் சிலை கடத்தல் வழக்கு விவரங்களை ஏடிஜிபியிடம் அளிக்க பொன்மாணிக்கவேலுக்கு உத்தரவிட்டனர்.





