--- --:--:-- --

முடிந்து போன விவகாரத்தை வைத்து தி.மு.க.வை மிரட்டிப் பார்க்கிறது த.வெ.க அரசு!

8

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் நடந்த 13-ஆம் தேதி காவல் நிலைய கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரால் கூறப்பட்ட லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினர்கள் மதுரை பரவையில் தங்களது உறவினர் வீட்டில் தங்கி உள்ள நிலையில் திமுக எம்பி கனிமொழி அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்பி கூறுகையில், பாலகிருஷ்ணன் என்பவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என காவல்துறையினர் சொல்லி இருக்கிறார்கள். தற்போது அவரது பிணத்தை குடும்பத்தினரிடம் கொடுத்திருக்கிறார்கள். பாலகிருஷ்ணன் தற்கொலை செய்யவில்லை. அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என நியாயம் கிடைக்க வேண்டும் என்று போராடியவர்கள் மீது வழக்கு போட்டிருக்கிறார்கள்.

 

 

ராணுவத்தில் உள்ள அவரது அண்ணன் மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள் பாலகிருஷ்ணனின் மகன் 17 வயது பையன் மேல் வழக்கு போட்டிருக்கிறார்கள். அவரது குடும்பத்தினரை மிரட்டி வருகிறார்கள். இது யாரால் நடந்தது போலீஸ் நிலையத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அதற்கு நியாயம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை குடும்பத்தில் இருக்கும் பேரன் பேத்திகள் முதல் அனைவரையும் மிரட்டுகிறார்கள் குடும்பத்தில் இருப்பவர்களிடம் பேரம் பேசி மிரட்டி இந்த விஷயத்தை வெளியில் கொண்டு வராமல் இருப்பதற்கு அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

 

 

பாலகிருஷ்ணனை கொலை செய்தவர்களை தண்டிப்பதற்கு இந்த அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பாலகிருஷ்ணன் உடலில் காயம் இருப்பதாக கூறப்படுகிறது, தலையில் ரத்த கசிவு இருப்பதாக கூறப்படுகிறது, நுரையீரலில் காயம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. தூக்கிட்டு தற்கொலை செய்தவருக்கு காலில் அடி, கையில் அடி ரத்த கட்டு உள்ளிட்டவைகள் உள்ளது. இது எப்படி ஏற்பட்டது. தற்போது முதலமைச்சராக இருக்கக்கூடிய விஜய் தேர்தலுக்கு முன்பு அப்போதைய முதல்வராக இருந்த தளபதியை பார்த்து கேட்டபோது சாரி எல்லாம் வேண்டாம் நியாயம் வேண்டும் என்று கூறிய தற்போதைய முதல்வர், இப்போதைய ஆட்சியில் சாரி கூட சொல்ல வேண்டாம் நியாயம் கூட கிடைக்கவில்லை.

 

 

எங்களுடைய முதலமைச்சர் தளபதி அப்போது ஒரு அமைச்சரை அனுப்பி அவர்களிடம் மன்னிப்பு கேட்டு நியாயம் கிடைக்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு என்ன நடந்தது என்று கேட்பதற்கு அரசு தரப்பில் இருந்து யாரும் வரவில்லை, விசாரணை என்ற பெயரில் ஒருவரை அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு தற்போது அந்த குடும்பத்தை மிரட்டி இதையும் கடந்து விடலாம் என இந்த தவெக அரசு நினைக்கிறது.

 

 

 

தொடர்ந்து அனைவர் மீதும் வழக்கு, யார் எதிர்த்து கேள்வி கேட்டாலும் அவர்கள் மீது வழக்கு என போட்டு வருகிறார்கள் அனைவர் மீதும் வழக்கு இங்கு அருகில் இருக்கக்கூடிய மூர்த்தி மீது முடிந்துபோன விவகாரத்தை வைத்து வழக்கு அனைவரையும் மிரட்டி விடலாம் என முந்தைய புகாரை தற்போது மீண்டும் எடுத்து வழக்கு பதிந்து திமுகவை மிரட்டி விடலாம் என நினைக்கிறார்கள்.

 

 

ஆட்சிக்கு வந்த பிறகு எந்த குற்றமும் நடக்காது என்று கூறியவர்கள் இன்று தினசரி குற்றங்கள் நடக்காத நாளில்லை தினமும் என்ன முடியாத அளவுக்கு குற்றங்கள் பாலியல் வழக்குகள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கஞ்சா கிலோ கணக்கில் கஞ்சா வழக்குகள் பாலகிருஷ்ணன் குடும்பத்தினர்கள் மிரட்டப்பட்டு இருக்கிறார்கள் அனைவர் மீதும் வழக்கு போட்டு மிரட்டி இந்த விஷயத்தை மூடி விடலாம் என்று நினைக்கிறார்கள். த.வெ.க அரசின் நோக்கம் பாலகிருஷ்ணன் குடும்பத்தினரை மிரட்டி வழக்குகளை வாபஸ் பெற வைக்க வேண்டும் அமைதியாக போக வைக்க வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது என்றார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon