--- --:--:-- --

கரையை கடந்த அக்வான் புயல்!

2

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று (19.11.2026) நிலவிய “அக்வான்” (Akvan) தீவிர புயல் (Severe Cyclonic Storm) வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை (20.11.2026) 02:30 மணி அளவில் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக (Cyclonic Storm) வழுவிழந்தது.

 

 

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று காலை 07:30 மணி முதல் 08:30 மணி வரையிலான இடைப்பட்ட நேரத்தில் தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரப் பிரதேச கடலோர பகுதிகளில், கோபால்பூருக்கு அருகே கரையை கடந்தது. இது மேலும் வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து, அடுத்த 3 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் அதற்கடுத்த 6 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வழுவிழக்கக்கூடும்.

 

 

இந்நிலையில், இன்று (20.11.2026) மற்றும் நாளை (21.11.2026) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதேபோல் இன்று முதல் 22.11.2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும். மேலும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

 

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon