முக்கிய 3 வழக்குகளில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!
சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது, ரஃபேல் விமான முறைகேடு உள்ளிட்ட மூன்று முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.
அந்த தீர்ப்புக்கு எதிராக தொடங்கப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றம் வழங்க உள்ளது.
இதேபோல் 36 ரபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடைபெறவில்லை என்ற தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரிய மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
காவலாளியே திருடன் என பிரதமரை, ராகுல் காந்தி விமர்சித்ததை எதிர்த்து பாஜக எம்பி மீனாட்சிலேகியால் தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. வருகிற 17-ஆம் தேதி முதல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற உள்ள நிலையில் முக்கிய வழக்குகளில் தீர்ப்பு இன்று வெளியாக உள்ளது.






