--- --:--:-- --

மீண்டும் ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறையும் ஒரு சவரன் தங்கம் விலை!

2

நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை அதிகம் சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களுமே தங்கம் விலை தொடர் சரிவை கண்டு வருகிறது. 5 நாட்களில் மட்டுமே சவரனுக்கு ரூ.5,120 குறைந்துள்ளது நகை பிரியர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் ரூ.12,695க்கும், சவரனுக்கு ரூ.960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,01,560க்கும் விற்பனை செய்யப்பட்டது.

 

தொடர்ந்து இன்றும் தங்கம் விலை அதிரடியாக குறைந்து எதிர்பாராத சரிவை சந்தித்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.12,615க்கும், சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,00,920க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

 

அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.65 குறைந்து ஒரு கிராம் ரூ.10,325க்கும், சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ.82,600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.195க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 95 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon