--- --:--:-- --

எத்தனை உயிர்கள் பறிபோனாலும் விஜய் வாய் திறக்கப் போவதில்லை : கனிமொழி

13

தி.மு.க எம்.பி கனிமொழி தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், நேற்று மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைகள் நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. தேனியில் சிறப்புக் காவல் உதவி ஆய்வாளர், திருவள்ளூரில் ஓர் இளம்பெண், சமயபுரத்தில் இரு சிறார்கள், திருச்சியில் ஓர் ஐடி ஊழியர் எனப் பல மாவட்டங்களில் உயிர்கள் பறிபோயுள்ளன.

 

 

ஒருபுறம் மக்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருக்க, இந்த மனிதாபிமானமற்ற ஆட்சியில் மறுபுறம் உயிர்களை இழந்த குடும்பங்களில் மரண ஓலம் கேட்டுக்கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோனாலும், திரைக் கவர்ச்சியால் கிடைத்த வெற்றி தந்த அகந்தையில் வாழும் முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய் திறக்கப் போவதில்லை.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon