கொரோனாவை விட கொடிய நோயை உருவாக்கும் ஏ.ஐ: பில் கேட்ஸ் எச்சரிக்கை
செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) தொழில்நுட்பத்தை அரசாங்கங்கள் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் பேட்டி ஒன்றில் எச்சரித்துள்ளார்.
இணையத்தில் பல ஏ.ஐ மாடல்கள் இலவசமாகக் கிடைப்பது மிகவும் ஆபத்தானது எனக் குறிப்பிட்டுள்ள அவர், அழிவுச் சக்திகள் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் புதிய விதமான நோய்க்கிருமிகளை உருவாக்கி அவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தக்கூடும் என்றும், அப்படி நடந்தால் அது கொரோனாவை விடப் பேரழிவை ஏற்படுத்தும் கொடிய நோயாக உருவெடுக்கக்கூடும் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




