மேகதாது விவகாரம்: பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம்
தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட அனுமதிக்கக் கூடாது என பிரதமர் மோடிக்கு விஜய் கடிதம் எழுதியுள்ளார்.அதில், ”காவிரி படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்ட எவ்வித அனுமதியும் வழங்கப்படக் கூடாது.
மேகதாது அணை கட்ட கர்நாடகம் உத்தேசித்துள்ள இடத்தை ஒன்றிய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல. கர்நாடகாவின் மேகதாது அணை திட்டம் தமிழநாட்டுக்கான உரிய நீர்வரத்தை தடுக்கும்.தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் மேகதாது திட்டம் உள்ளது” தெரிவித்துள்ளார்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




