உயர்நிலைக் குழு கலைப்பு அதிர்ச்சி அளிக்கிறது: எம்.பி ரவிக்குமார் கண்டனம்
விசிக எம்.பி ரவிக்குமார் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ”மத்திய மாநில உறவுகளை சீராய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான ‘ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக்குழு’ கலைக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.நீதிபதி குரியன் ஜோசப் ஆணையத்தைக் கலைக்கக்கூடாது என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோல சட்டமன்றையின் முதல் கூட்டத்திலேயே வன்னி அரசும் வலியுறுத்தியுள்ளார். இறுதி அறிக்கை நிறைவுசெய்யப்படும் நிலையில் இருக்கும்போது இந்த அவசர முடிவு ஏன் எடுக்கப்பட்டதெனப் புரியவில்லை. சட்ட ஆணையம் அந்தப் பணிகளைத் தொடர்வது சாத்தியமில்லை. முதலமைச்சர் இந்த முடிவை மறுபரிசீலனை செய்யவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




