இந்தியாவிலேயே முதன்முறையாக ஏஐ பயன்படுத்தி திமுக ஊழல் – அமைச்சர் ராஜ்மோகன்
இந்தியாவிலேயே முதன்முறையாக ஏஐ பயன்படுத்தி திமுக ஊழல் செய்துள்ளதாகவும் அகல்விளக்கு பதிப்பக புத்தகங்களை 7 நாட்களில் வழங்கிட கடந்த பிப்ரவரி மாதத்தில் திமுக அரசு உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கோவை காந்திபுரத்தில் கடந்த திமுக ஆட்சியில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டது. தவெக ஆட்சி அமைந்ததை தொடர்ந்து பெரியார் அறிவுலகத்தை கடந்த மாதம் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
நூலகத்தின் நான்காவது தளத்தில் தமிழ் நூல்களுக்கு என தனி பிரிவு உள்ளது. இங்கு அகல் விளக்கு என்ற பதிப்பகத்தின் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதுவரை கேள்விப்பட்டிராத அந்த பதிப்பகத்தின் பெயரில் மட்டும் 1500க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. இதனால் அதில் இருக்கும் எழுத்தாளர்களின் பெயர்கள் போலியானவை என்ற சந்தேகமும் வாசகர்கள் இடையே எழுந்துள்ளது.
தமிழ் நூல்கள் பிரிவில் உள்ள 2,000-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் திட்டமிட்டு அச்சடிக்கப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டிய எழுத்தாளர் கரீம், புத்தகங்களில் உள்ள தகவல்கள் மற்றும் எழுத்தாளர்களின் விவரங்கள் குறித்தும் சந்தேகம் எழுப்பினர். பெரியார் அறிவுலகத்தில் நூல் கொள்முதலில் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி உண்மை நிலையை அரசு வெளிப்படுத்த வேண்டும் என்பதே எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களின் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், இந்தியாவிலேயே முதல்முறையாக ஏஐ பயன்படுத்தி திமுக ஊழல் செய்துள்ளது. அகல் விளக்கு பதிப்பகத்தில் புத்தகம் வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருப்பது பிப்ரவரி மாதத்தில், ஏழு மாதத்தில் அனைத்து புத்தகம் வழங்கிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குப்பையில் கூட வீச தகுதியற்ற நூல்களை எல்லாம் 7 நாட்களில் கொடுக்க வேண்டும் என்று அரசாணை வழங்கப்பட்டுள்ளது. புத்தகங்களை எல்லாம் அடிக்கி வைக்கப்பட்ட போது சீலீடப்பட்டது தான் ஜூன் மாதம்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே இதற்கான கமிட்டி மீட்டிங் நடத்தப்பட்டுள்ளது. 137 பேர் இந்த கமிட்டியில் இருக்கிறார்கள் அதில் 112 பேர் அந்த மீட்டிங்கில் கலந்து கொண்டுள்ளனர். திமுக கட்டாயப்படுத்தியதன் பேரில்தான் இந்த நூல்கள் வாங்கப்பட்டுள்ளது. புத்தகம் வாங்கியதற்கான பணம் பரிவர்தணை செய்யப்பட்டது மார்ச் மாதம் தான். நவம்பர் மாதம் நடந்த கமிட்டி மீட்டிங்கில் அந்த குழுவினர் உறுப்பினர்கள் கையெழுத்து போடப்பட்ட புத்தகத்தை இன்று கூறப்பட்ட அத்தனை புத்தகங்களின் பெயரும் உள்ளது.
காமராஜர் நூலகம், அண்ணா நூலகம், கலைஞர் நூலகம் என அனைத்து நூலகத்திலும் இந்த குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. பெரியார் பெயரில் ஊழல் செய்து இருக்கிறீர்களே, இந்த ஏஐ குப்பைகளை உங்கள் வீட்டு பிள்ளைகளுக்கு கொடுப்பீர்களா? இந்த ஊழலுக்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும். சட்ட ரீதியாக நாங்கள் இதை எதிர்கொள்வோம்.
இதன் பின் எத்தனை அரசியல்வாதி இருந்தார்களோ அவர்கள் அனைவரையும் சட்டரீதியாக எதிர்கொள்வோம், மக்கள் முன்பு நிறுத்துவோம். கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாகவே இதை செய்து வருகிறார்கள். தாமரை, முரளி, பன்னீர், ஸ்டாலின், பவித்ரா கருணாநிதி இப்படிப்பட்ட எழுத்தாளர்களை யாருக்கு தெரியும்? புத்தகத்திலேயே இத்தனை ஊழல் நடந்திருக்கிறது என்றால் கட்டிடம் கட்டுவதில் எத்தனை ஊழல் செய்து இருப்பார்கள்.
திமுக ஆட்சியில் தான் இந்த புத்தகங்கள் பதியப்பட்டது. மாற்றங்கள் இருந்தால் மாற்றி தருகிறோம் என்று அந்த பதிப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். இதனை விசாரிக்க சிறப்பு குழு அமைக்க உள்ளோம். 137 பேர் உள்ள கமிட்டி எப்படி இதற்கு சம்மதித்தார்கள். அரசியல் செல்வாக்கு இல்லாமல் இது செய்ய முடியாது, திமுகவின் அமைச்சர் யார் இதற்குப் பின்னால் இருக்கிறார். திமுக விஞ்ஞான ஊழல் செய்வார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் எங்கள் ஆட்சியில் நாங்கள் பார்த்திருக்கிறோம் என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




