--- --:--:-- --

தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

3

தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ் செயல் பட்டு வரும் சமூகநீதி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வரவேற்பு பரிசு வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி 38 மாவட்டங்களில் உள்ள 1,252 விடுதிகளில் தங்கி படிக்கும் 58 ஆயிரத்து 143 மாணவர்களுக்கு தலா ஒரு பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

 

 

இந்த வரவேற்பு கிப்ட்டில், 7 வகையான பொருட்கள் இடம்பெறுகின்றன. அதாவது, மெத்தையுடன் கூடிய கோரைப்பாய், படுக்கை விரிப்பு, துருப்பிடிக்காத தட்டு, டம்ளர், பிளாஸ்டிக் வாளி, பிளாஸ்டிக் குவளை மற்றும் சணல் பை ஆகியவை வழங்கப்படுகின்றன.

 

 

மாணவர்கள் விடுதியில் தங்கும்போது அன்றாடம் பயன்படுத்தும் வகையில் இந்தப் பொருட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. படுக்கையுடன் கூடிய பாய் 36 அங்குலம் அகலம், 72 அங்குலம் நீளம் கொண்டதாகவும், படுக்கை விரிப்பு 60 அங்குலம் அகலம், 90 அங்கு லம் நீளம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.

 

 

மேலும் சணல் பை, துருப்பிடிக்காத தட்டு மற்றும் டம்ளர் ஆகியவை தரமானதாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக் வாளி மற்றும் குவளை ஆகியவை மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டதாக இருக்கக்கூடாது. சணல் பையும் குறிப்பிட்ட அளவில் தரமானதாக இருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

 

 

அதேபோல் இந்தப் பொருட்களை வாங்குவதற்காக தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அடுத்த மாதம் 7 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon