தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..!
அமெரிக்க தேர்தல் எதிரொலியாக தங்கம் விலை 2 நாட்களாக அதிகரித்து வந்தது.
தொடர்ந்து நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.245 குறைந்து ஒரு கிராம் ரூ.13,140க்கும் சவரனுக்கு ரூ.1,960 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,120க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்று தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,160க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,05,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,770க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.86,160க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.205க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





