தங்கம் விலையில் அதிரடி மாற்றம்..!
அக்டோபர் மாத கடைசியில் தங்கம் விலை அதிரடியாக குறைந்து நகை பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அதன் தொடர்ச்சியாக நவம்பர் மாத முதல் நாளே தங்கம் விலை கணிசமாக உயர்ந்தது. நேற்றைய நிலவரப்படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,775க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,200க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து இன்றும் தங்கம் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. அதன் படி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,800க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,02,400க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,475க்கும், சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.83,800க்கும் விற்பனை செய்யப்படுகிறது.வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.200க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





