பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!
பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஹோட்டல் மேலாண்மைத் துறையில் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல் கலைஞர் செஃப் தாமு.
ஆரம்பக் காலத்தில் உணவகங்களில் பாத்திரம் கழுவும் பணியில் தொடங்கி, தன் கடின உழைப்பால் பத்மஸ்ரீ விருது மற்றும் கின்னஸ் சாதனை வரை உயர்ந்தவர். விஜய் டிவியில் ஒளிபரப்பாக ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார். அந்த நிகழ்ச்சியின் ‘சீசன் 7’ அரை இறுதிப் போட்டியில் (Semi-finals) அவர் பங்கேற்கவில்லை.
காலில் ஊசி போட்டதால் இறுதி போட்டியில் பங்கேற்க முடியவில்லை என வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் செஃப் தாமு. மேலும், நலமுடன் இருப்பதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடுப்பு எலும்பு முறிவு மற்றும் முழங்கால் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டதால் அவர் சக்கர நாற்காலியைப் பயன்படுத்திய சூழல் நிலவியது.
இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த செஃப் தாமு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சின்னத்திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் தங்கல் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2010-ம் ஆண்டு தொடர்ச்சியாக 24 மணி 30 நிமிடம் 12 வினாடிகள் சமையல் செய்து, 617 வகையான உணவுகளை (சுமார் 190 கிலோ உணவு) தயாரித்து கின்னஸ் உலக சாதனையை செஃப் தாமு படைத்தது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





