--- --:--:-- --

மோடி வருகை: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

14

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையையொட்டி, நகரின் முக்கிய பகுதிகளில் நாளை (அக்டோபர் 11) வணிக மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதாகக் காவல்துறை அறிவித்துள்ளது.

 

 

இதன்படி, தாம்பரத்திலிருந்து ஜிஎஸ்டி சாலையில் வரும் வாகனங்கள் குன்றத்தூர் சாலையிலும், பல்லாவரத்திலிருந்து வரும் வாகனங்கள் ஹோட்டல் ஏர்வே அருகே தாம்பரத்தை நோக்கியும் திருப்பி விடப்படும். மேலும், கோயம்பேட்டிலிருந்து வரும் வாகனங்கள் அசோக் நகர் 2-வது அவென்யூவிலும், அசோக் பிள்ளரிலிருந்து வரும் வாகனங்கள் சிபெட் சந்திப்பில் கிண்டி தொழிற்பேட்டை நோக்கியும் திருப்பி விடப்பட உள்ளன.

 

 

இதேபோல, மவுண்ட் பூந்தமல்லி சாலையிலிருந்து வரும் வாகனங்கள் மதுரவாயல் நோக்கியும், OMR மற்றும் சர்தார் படேல் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் காந்தி மண்டபம் சந்திப்பிலும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. பிரதமரின் பயணத் திட்டத்தின் காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களின் பயணத்தைத் திட்டமிட்டுச் மேற்கொள்ளுமாறு காவல்துறை தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon